திரைப்படங்கள் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே அதை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடும் பல இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தமிழ் சினிமா உலகிற்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டு வருகிறது.
இந்த இணையதளங்களை முடக்க, விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல ஆயிரம் சட்ட விரோதமாக திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கினாலும், தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பல நாடுகளில் இருந்து அட்மின்கள் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் என்றாலே சினிமா பிரபலங்கள் பயந்து நடுங்குகிறார்கள். ஒரு பக்கம், தமிழ் ராக்கர்ஸை இணையத்தை நடத்துபவர்கள் விரைவில் கைது செய்ய்ப்படுவார்கள், அந்த இணையதளமும் விரைவில் மூடப்படும், என்று விஷால் கூறி வந்தாலும், மறுபக்கம் தங்களது படங்கள் ரிலிஸின் போது, அப்படத்தின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தமிழ் ராக்கர்ஸிடம் கெஞ்சுகின்றனர்.
அந்த வகையில் பலூன் படத்தின் இயக்குநர் சினிஷும் தமிழ் ராக்கர்ஸிடம் கெஞ்சியுள்ளார். பல ஆங்கிலப் படங்களின் காப்பியான ‘பலூன்’ படத்தின் ஜெய் - அஞ்சலி நடித்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் இயக்குநர் சினிஷ், “ஒரு வாரம் எங்களது படத்தை வெளியிடாமல் இருந்தால், தயாரிப்பாளர் தப்பித்துக் கொள்வார். எனவே, பார்த்து செய்ங்க” என்று தமிழ் ராக்கர்ஸிடம் கெஞ்சியுள்ளார்.
படத்தில் விஷயம் இருந்தால் தமிழ் ராக்கர்ஸ் என்ன இந்தியன் ராக்கர்ஸே படத்தை போட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை, ஆனால் சினிஷ் ஜெராக்ஸ் காப்பி எடுத்திருப்பதால் இப்படி பயப்படுகிறார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...