நடிகர் அஜித் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகராக இருந்தாலும், தனது ரசிகர்களை என்றுமே தவறாக பயன்படுத்தியதில்லை. அதேபோல், அவர்களை வைத்து விளம்பரமும் தேடியதில்லை. இருந்தாலும், அஜித் என்ன செய்தாலும் அதை அவரது ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும், மதுரையில் உள்ள ரசிகர்கள் பேனர் வைப்பதில் பல யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அவர்கள் கையாண்ட சமீபத்திய யுக்தி அஜித்தை அசிங்கப்படுத்தியது போல இருப்பதாக, அவரது ரசிகர்களே புலம்புகின்றனர்.
அஜித்தின் மகளை ஜெயலலிதா போன்று சித்தரித்து, பேனர் ஒன்றை மதுரை அஜித் ரசிகர்கள் வைத்துள்ளனர். பலரை முகம் சுழிக்க வைத்த இந்த பேனர், அஜித்தை ரொம்பவே அசிங்கப்படுத்தும் செயல் என்று, அஜித்தின் ரசிகர்களே புலம்புகிறார்களாம்.
மேலும், இதுபோன்ற செயல்களுக்காகவே ரசிகர் மன்றங்களை அஜித் கலைக்க, இது தொடர்ந்துக் கொண்டு இருந்தால், அவரின் கோபம் அதிகரிக்கவே செய்யும் என்றும் கூறுகின்றனர்.
அஜித் ரசிகர்களின் முட்டாள் தனம் pic.twitter.com/hODrrxau8n
— CinemaInbox (@CinemaInbox) December 26, 2017
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...