கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் பற்றி பேசி பரபரப்பை ஏற்றினார். அவர் பேசியதை வைத்து பார்த்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவார், என்று தெரிந்தது. மேலும், பல மூத்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், ஊடக அதிகாரிகளை அழைத்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.
இதற்கிடையே, கமல்ஹாசன் அரசியலில் அதிரடியை காட்ட தொடங்கியதால், ரஜினிகாந்த அமைதியானதோடு, தனது அரசியல் நிலைப்பாட்டால் மக்களை குழப்ப தொடங்கினார்.
இந்த நிலையில், இன்று முதல் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தொடங்கியுள்ள ரஜினிகாந்த், இன்றைய சந்திப்பில் தனது அரசியல் நிலைபாடு குறித்து டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசியவர், “ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களை பார்த்தவுடனேயே தனக்குள் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. கதாநாயகன் ஆசையில் தான் சினிமாவுக்கு வரவில்லை. ரஜினி ஸ்டைல் என முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் தான். எனது பிறந்த நாளின்போது நான் தனியாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். இந்த முறை என்னை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் வந்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததற்காக வருந்துகிறேன்.
எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் தான் அதிக ஆர்வத்தில் இருக்கின்றன. போர் என்றால் அரசியல் என்று தான் அர்த்தம். அரசியல் எனக்கு புதிது அல்ல, அரசியல் பற்றி தெரிந்ததால் தான் வர தயங்கிறேன். போரில் ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது, வியூகம் வேண்டும். கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக அவசியம். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன்.” என்றார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...