தென் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினி பாண்டே, ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் ஜீவா ஹீரோவாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் ஜீவாவின் 29 வது படமாகும். இதில் ஹீரோயினாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோயின் ஷாலினி பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டான் சாண்டி இயக்குகிறார்.
படம் குறித்து கூறிய இயக்குநர் டான் சாண்டி, “ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் ஜேனரில் இப்படம் உருவாகிறது. இதற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விசயம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.” என்றார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...