Latest News :

சமந்தா பற்றி லீக்கான சீக்ரெட் - ஷாக்கான நாக சைதன்யா!
Tuesday December-26 2017

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, செனையை அடுத்துள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

 

ஆனால், சமந்தா பற்றி அறியான ஒரு சீக்ரெட் தற்போது வெளியாகி, நாக சைதன்யாவுக்கு பெரும் ஷாக் கொடுத்திருக்கிறது. அவர் மட்டும் அல்ல, இந்த விஷயத்தை அறிந்த அனைவரும் ஷாக்காகியுள்ளனர்.

 

பல கோடிகள் சம்பளம் வாங்கும் சமந்தா, தனது 14 வயதிலேயே வேலைக்கு செல்ல தொடங்கி விட்டாராம். தனது தேவைகளுக்கான பணத்தை வீட்டில் கேற்காமல், தானே சம்பாதித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வாராம்.

 

அப்படி அவர், செய்த பல வேலைகளில், திருமண வீட்டில் வாசலில் நின்று விருந்தாளிகளை வரவேற்கும் வேலையும் ஒன்றாம். ஒரு திருமண நிகழ்ச்சியில் இதுபோன்ற வேலை செய்தால் 1000 ரூபாய் சம்பளம் கிடைக்குமாம். இப்படி பல முறை 1000 ரூபாய்க்காக திருமண மண்டபத்தின் வாசலில் நின்றுள்ளதாக, சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

 

தற்போது, திரைப்படங்களில் நடித்து பல கோடிகளை சம்பாதித்தாலும், திருமண மண்டபத்தில் வருபவர்களுக்கு பன்னீர் தெளித்து சம்பளமாக 1000 ரூபாய் வாங்கியது போன்ற கிக் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Related News

1629

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery