நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி சென்னையில் நடந்த கொடூர விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27). இவர் தனது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த நான்குபேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜீவன்குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
ஜீவன்குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவன்குமார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, அவரது இறுதிச் சடங்கில் நேரில் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...