ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமனா ஜெனிலியா, தனது குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். விஜய், தனுஷ், ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தார்.
இதற்கிடையே, இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜெனிலியா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். தற்போது இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன.
இந்த நிலையில், ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷின் 40 வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது ஜெனிலியா தனது கணவருக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள டெச்லா மாடல் எக்ஸ் (Tesla Model X) என்ற காரை பரிசளித்தார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரித்தேஷ், “என் மனைவி கொடுத்த இந்த பரிசை பார்த்ததும் 40 வயதான நான் 20 வயது இளைஞனை போல மகிழ்ச்சியில் துள்ளினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இப்போ புரிந்ததா, தனது கணவரின் வயதை ஜெனிலியா எப்படி குறைத்தார் என்று.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...