கடந்த 22 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் சமூக அக்கறையோடு உருவாகியுள்ள இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் பாராட்டு கிடைத்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வேலைக்காரன்’ சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை முறியடித்ததோடு, கர்நாடாகவில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் மிகப்பெரிய வசூல் கிடைத்துள்ளது. அதேபோல், கேரளாவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பால், மேலும் 30 திரையரங்கங்களில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
இப்படி வெளியிட்ட இடமெல்லாம் வெற்றி பெற்றுள்ளது குறித்து இயக்குநர் மோகன் ராஜா கூறுகையில், “நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் 'வேலைக்காரன்' படத்திற்கு கிடைத்துள்ளது. கர்நாடகாவில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் மிகப்பெரிய வசூல் கிடைத்துள்ளது. படத்தின் அமோக வரவேற்பினால் இப்படத்திற்கு கேரளாவில் முப்பது ஸ்க்ரீன்கள் கூடுதலாக தரப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் 'வேலைக்காரன்' படத்திற்கு பேராதரவு கிடைத்து வணிக அளவில் மிக பலமாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறது .
சமுதாய அக்கறை கொண்ட நல்ல படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என்பது மறுபடியும் இப்படம் மூலம் நிரூபணமாகியுள்ளது. குடும்பங்களோடு திரையரங்கத்திற்கு மக்கள் வந்து இப்படத்தை ரசிப்பது எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சமுதாய அக்கறை உள்ள கதையை ஜனரஞ்சகமான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்ந்ததில் எனக்கு பெரும் திருப்தி.” என்றார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...