கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27) கார் விபத்தில் நேற்று பலியானார்.
திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், ஜீவன்குமார் உயிரிழந்தது திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, கார்த்தி ரசிகர்களிடமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை அறிந்த கார்த்தி நேற்று தனது இரங்கலை தெரிவித்ததோடு, நேரில் சென்று ஜீவன்குமாருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தார்.
அதன்படி, திருவண்ணாமலைக்கு வந்த நடிகர் கார்த்தி, ஜீவன்குமார் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், இறுதிச் சடங்கிலும் அவர் கலந்துக்கொண்டார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...