விஜயை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லீ, அடுத்ததாக ‘மெர்சல்’ படத்தை இயக்கியனார். இப்படங்கள் கதை சிலரால் விமர்சிக்கப்பட்டாலும், இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அட்லீ தனது அடுத்த படத்திலும் விஜயுடன் தான் இணையப் போகிறார் என்றும், அப்படம் ‘மெர்சல் 2’ ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம் முடிந்த பிறகே அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்தார். இதற்கு முதலில் ஓகே சொன்ன அட்லீ, பிறகு முருகதாஸ் படம் முடிய காலதாமதம் ஆகும் என்பதால் வேறு ஒரு ஹீரோவுடன் இணையும் முடிவுக்கு வந்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து தனது அடுத்த படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’பாகுபலி’ புகழ் இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், கதையாசிரியருமான விஜயேந்திர பிரசாத் தான் இந்த படத்திற்கு கதை எழுதுகிறாராம். இவர் தான் ‘மெர்சல்’ படத்திற்கும் கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சாஹா படத்தில் நடித்துவரும் பிரபாஸ், அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த வருடம் அட்லீ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றாலும், அட்லீயின் நெருக்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...