பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில வாரங்களாக பரபரப்பு குறையாமல் நகர்த்தி வந்த ஓவியா, தற்போது அந்த வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அவரது வேலை பார்க்கும் நபராக பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காயத்ரியை தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே, ஓவியாவை சேரி பிஹேவியர் என்று கூறியதோடு, அவ்வபோது கெட்ட வார்த்தைகளையும் பேசி வந்த காயத்ரி, வெளியே வரட்டும் அவளை பார்த்துக்கொள்கிறேன், அறை மணிநேரம் கேமிராவை நிறுத்தினால் போதும் அவளை ஒரு வழி செய்து விடுவேன், என்றெல்லாம் பேசி வந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் கடந்த வார எபிசோடுகளில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். அப்போது காயத்ரியிடம் கெட்ட வார்த்தை பேசியது குறித்து விசாரித்த அவர் காயத்ரியை கண்டித்தார்.
கமல்ஹாசனின் கண்டிப்பை பொறுத்துக் கொள்ள முடியாத காயத்ரி, தற்போது கமலையே விமர்சித்துக் கொண்டிருக்கிறார். தான் கெட்ட வார்த்தை பேசுவதாக மக்களிடம் தூண்டி விடுவதே கமல் தான் என்று குற்றம் சாட்டியுள்ள அவர், தன்னை திருத்த தனது அம்மாவை தவிர யாருக்கும் உரிமையில்லை என்று, கமல்ஹாசன் தன்னை எரிச்சல் படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...