சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கும் படம் காலா. வுண்டர்பேர் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்த படம், கபாலி திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரும் - பா.ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டப்பிங் இன்று சென்னையில் உள்ள KNACK ஸ்டூடியோவில் தொடங்கியது.
இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் கலந்து கொண்டார். காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா ஆகியோர் அண்டித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...