பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள தாடி பாலாஜி, தற்போது முன்னணி டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே, கடந்த பல மாதங்களாக தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக காவல் நிலையம், நீதிமன்றம் என்று இருந்த தாடி பாலாஜி, தற்போது மனைவி மற்றும் தனது குழந்தையை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.
தாடி பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தாடி பாலாஜி மீது அவரது மனைவி பல புகார்களை தெரிவிக்க, தாடி பாலாஜியும் அவர் மனைவி மீது பல புகார்களை தெரிவித்தார். தற்போது இருவரும் அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கி விட்டார்கள். தாடி பாலாஜியின் மனைவி பேஷான் ஷோ, நிகழ்ச்சி நடத்துவது என்று பிஸியாகி விட்டார்.
இந்த நிலையில், குழந்தைகள் பங்கேகும் கிங்ஸ் ஆஃப் காமெடி டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தாடி பாலாஜி, அதில் குழந்தைகளின் திறமையை பாராட்டி பேசிய போது, ”இவர்களை பார்க்கும் போது என் மகள் போர்ஷிகாவை நான் மிஸ் செய்கிறேன்” என்று கூறி கண்ணீர்விட்டு அழுதார்.
பாலாஜியின் இத்தகைய நிலையைப் பார்த்து அந்த செட்டில் இருந்தவர்கள் அவர் மீது பரிதாபப்பட்டனர்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...