ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வரும் ரஜினிகாந்த், இன்று மூன்றாவது நாளாக ரசிகர்களை சந்தித்தார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.
ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த், ”ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போட ஆசை உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.
ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். கடவுள், தாய், தந்தை, பெரியோர்கள் காலில் மட்டுமே விழ வேண்டும்.
பணம், பெயர், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ வேண்டும் என்று அவசியமில்லை.
மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளம். உங்களைப் போலவே சிறுவயதில் நடிகர் ராஜ்குமாரின் ரசிகனாக இருந்தேன்.” என்று தெரிவித்தார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...