Latest News :

ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களை கை தட்ட வைக்கும் ‘விவேகம்’!
Tuesday August-08 2017

தமிழ் திரையுலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ‘விவேகம்’ இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாவது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அப்படம் குறித்து ரசிகர்கள் அறியாத பல விஷயங்கள் தற்போது படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில், திரைப்படங்களின் ஒரிஜனல் ரிசல்டுக்கு சொந்தக்காரர்களாக கருதப்படுபவர்கள் அப்படத்தின் எடிட்டர்கள் தான். இவர்கள் அதிகமாக பேசுவது அறிதான ஒன்றாக இருந்தாலும், இவர்கள் மனம் விட்டு ஒரு படத்தைப் பற்றி பேசிவிட்டார்கள் என்றால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி தான்.

 

அந்த வகையில், சமீபத்தில் ஒரு படத்தைப் பற்றி, ரொம்ப புகழ்ந்து பேசியிருப்பவர் படத்தொகுப்பாளர் ரூபன். அஜித்தின் விவேகம் படத்தின் எடிட்டரான இவரது பேச்சு தான் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பேச்சாகியுள்ளது.

 

அந்த பேச்சு இதோ, “விவேகம்',படம் முழுவது கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு உண்மையான, பிரம்மாண்டமான சர்வதேச உளவு படம். திரையில் அஜித் சார் தோன்றும் ஒவ்வொரு பிரேமும் பலத்த இடியை போல் மிக வலுவாக இருக்கும். அவரது அசுர உழைப்பை கண்டு வியந்தேன். அவ்வளவு சிறப்பாக அவர் செய்துள்ளார். அவர் இப்படத்தில் செய்திருக்கும் ஆபத்தான சண்டை காட்சிகள் பார்ப்பவர்கள் வாயை பிளந்து பார்க்கும் வகையில் இருக்கின்றது. இப்படத்தின்  'தலை விடுதலை' பாட்டின் காட்சியமைப்பு 'ஆலுமா டோலுமா' பாடலை விட பத்து மடங்கு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அஜித் சாரின் ரசிகர்களுக்கும். பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் 'விவேகம்' ஒரு மாபெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும். இயக்குனர் சிவா சாருடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம். எங்கள் இருவருடைய சிந்தனை போக்கில் நிறைய ஒற்றுமை இருப்பதால் எனது பனியை  மேலும் திறம்பட செய்யமுடிகிறது. அவர் என் மேல் வைக்கும் நம்பிக்கை எனக்கு மேலும் உழைக்க தூண்டுதலாக இருக்கின்றது. இது ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக இருந்தாலும் இதில் வரும் கணவன் மனைவி காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. 'விவேகம்' ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆகஸ்ட் 24 அன்று திரை அரங்குகளில் ரசிகர்கள் வெள்ளத்தோடு 'விவேகம் ' படத்தை காண ஆவலோடு இருக்கிறேன்'' என்றார்.

 

படத்தை பதம் பார்த்து வெட்டும் எடிட்டரையே இந்த அளவுக்கு வசிகரித்துள்ள விவேகம், சினிம ரசிகர்களை என்ன பாடுபடுத்துமோ!

Related News

165

’மை லார்ட்’ மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது! - மகிழ்ச்சியில் சசிகுமார்
Thursday February-19 2026

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது   சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...

முதல் பார்வையை வெளியிட்ட ’அச்சுத அவதாரம்’ படக்குழு!
Thursday February-19 2026

நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...

’ஹாட் ஸ்பாட் 2’ இயக்குநருக்கு கிடைத்த வெற்றி பரிசு!
Thursday February-19 2026

கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது...

Recent Gallery