Latest News :

தினேஷுக்கு திருப்பு முனையாக அமைந்த ‘உள்குத்து’
Thursday December-28 2017

’அட்டகத்தி’ மூலம் ஹீரோவான தினேஷ் ‘குக்கூ’, ‘திருடன் போலீஸ்’ என்று தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்தாலும் ‘விசாரணை’ படத்திற்கு பிறகு காணாமல் போய்விட்டார். அதன் பிறகு அவர் நடித்த ‘ஒரு நாள் கூத்து’ எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறாததால் தினேஷ் ஒரு வெற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

 

தினேஷ் அதிகமகா நம்பியிருந்த ‘உள்குத்து’ படமும் வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், நாளை (டிச.29) இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘உள்குத்து’ தினேஷுக்கு திருப்புமுனையாக அமையும் வகையில் உள்ளதாக படம் பார்த்த பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

 

’திருடன் போலீஸ்’ இயக்குநர் கார்த்தி ராஜு இயக்கத்தில், பி.கே.பிலிம்ஸ் சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நேற்று பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டதோடு, நேற்று மாலை பிரபலங்களுக்கும் திரையிடப்பட்டது.

 

படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் பாராட்டு தெரிவித்ததோடு, படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்கள். அதேபோல் படம் பார்த்த பிரபலங்களும் படம் நன்றாக இருப்பதாக கூறியதோடு, இந்த படத்தின் வெற்றியால் தினேஷும் அடுத்த அடுத்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள்.

 

பத்திரிகையாளர்களும், பிரபலங்களும் பாராட்டு தெரிவித்துள்ளதால் ‘உள்குத்து’ குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related News

1652

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery