Latest News :

தனுஷை இயக்குநராக்கும் விஜய் பட தயாரிப்பாளர்!
Friday December-29 2017

வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், அப்படங்களின் படப்பிடிப்புக்கு அவ்வபோது பிரேக் கிடைப்பதால் இடையில் வேறு சில படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார்.

 

அதன்படி, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடிக்க உள்ள தனுஷ், இப்படத்திற்கு பிறகு ஒரு படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இப்படத்தை ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

ராஜ்கிரனை வைத்து தனுஷ் இயக்கிய ‘பா.பாண்டி’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து மீண்டும் படம் இயக்கும் முடிவு உள்ள தனுஷ், இந்த படத்தை ஆக்‌ஷன் படமாக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

தனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் 2018-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related News

1654

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery