சென்னை ஆழ்வாட்பேட்டை, சிபி ராமசாமி சாலையில் மாந்கராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதில் ஒரு கட்டடத்தில் ரஜினிகாந்தின் மனைவி, லதா கடந்த 25 ஆண்டுகளாக ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த கட்டடத்திற்கு வாடகையாக மாதம் ரூ.3702 அவர் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில், வாடகை தொகையை ரூ.21,060 ஆக மாநகராட்சி சமீபத்தில் உயர்த்தியுள்ளது. ஆனால், இந்த தொகையை செலுத்த லதா ரஜினிகாந்த் மறுத்ததோடு, மாநகராட்சிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, லதா ரஜினிகாந்தின் வழக்கை தள்ளுபடி செய்ததோடு, அவரது டிராவல்ஸ் நிறுவனத்தை போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அகற்றலாம், என்று உத்தரவிட்டார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...