AAA படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து படம் இயக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பயந்து வரும் நிலையில், மணிரத்னம் அவரை தனது படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். மணிரத்னம் படத்தில் பல ஹீரோக்கள் நடிக்க, அதில் ஒருவர் தான் சிம்பு என்பதால், மணிக்கு பெரிய அளவில் பாரமாக சிம்பு இருக்க மாட்டார்.
ஆனால், மணிரத்னம் படத்திற்குப் பிறகு சிம்புவை வைத்து தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் ஒருவர் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தான் மோகன் ராஜா. ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ என்று அடுத்தடுத்த மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கும் மோகன் ராஜா, அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் இசை சம்மந்தமான கதை களத்தை கொண்ட படமாம்.
இது குறித்து சிம்புவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் மோகன் ராஜா, விரைவில் அதிகாரப்பூர்வமாக இப்படம் குறித்த தகவலை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...