இந்த ஆண்டு தொலைக்காட்சிகளின் முதன்மை நிகழ்ச்சியாக பிக் பாஸ் இடம்பெற்றுள்ளது. தொலைக்காட்சி பார்க்காதவர்களைக் கூட பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தற்போது பிரபலமானவர்கள் ஆனதோடு, சினிமா பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.
போட்டியில் வெற்றி பெற்ற ஆரவ், கூட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு வழங்கப்பட்ட பல லட்ச பணத்தை அவர் என்ன செய்தார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆரவ், “அந்த பணத்தை வைத்து திருநெல்வேலியில ஒரு என்.ஜி.ஓ தொடங்கியிருக்கேன். தமிழ்நாட்டில் எந்தவொரு தேவை இருந்தாலும் இந்த என்.ஜி.ஓ அந்த இடத்துல உள்ள மக்களுக்கு உதவி செய்யும். ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுறதுதான் இந்த அமைப்போட நோக்கம். மதம், இனம், மொழி கடந்து இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்ற குறிக்கோள் வைத்திருக்கோம்.” என்றார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...