Latest News :

எம்.ஜி.ஆர் படத்திற்காக படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சுடப்பட்ட காட்சி!
Friday December-29 2017

காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த தமிழக முதலவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ’எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது.

 

1967 ஆம் ஆண்டு தமிழகத்தை அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்திய நிகழ்வு எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட சம்பவம். எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக அந்த சம்பவம் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டது.

 

மேலும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி, அன்றைய திரைப்பட இயக்குனர்கள் பி.ஆர்.பந்துலு, கே.சங்கர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன.

 

இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், பி.ஆர்.பந்துளுவாக Y.G.மகேந்திரன், ஜானகி அம்மாவாக ரித்விகா, எம்.ஜி.சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, மற்றும் வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர்.

 

ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

 

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரியில் பிரதமர் மோடியால் வெளியிடப் படவேண்டுமென்று, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக திரைப்படக் குழுவினர் தெரிவித்தனர்.  

Related News

1661

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery