Latest News :

சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால்
Friday December-29 2017

விஷால் நடிப்பில் , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில்  நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா , இயக்குநர் P.S. மித்ரன் , இயக்குநர் சுசீந்திரன் , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன் , இயக்குநர் திரு , நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய விஷால், “இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை  தயாரித்துள்ளோம். இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை கட்டாயம், அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது.  

ஆர்.கே. நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக் கொண்டதில் மித்ரனும் ஓருவன். ஏனெனில்  மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று மித்ரன் வேண்டுதல் நிறைவேறியது. நான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடாமல் நான் சுயநலவாதியாக என்னுடையப் படம், நான் வட்டி கட்டிக்கொண்டு இருக்குறேன் இன்னும் ஒரு ஆறு மாதம் தள்ளி போனால் வட்டி அதிகரிக்கும் என்று எண்ணி ஏப்ரல் 14 வெளியிடலாம் என்று நினைத்து இருந்தால் ஆனால் இந்த தொழில்துறை நன்றாக இருக்கவேண்டும் என்ற ஓரே காரணத்தால் தான் இந்த படத்தை தள்ளி போடப்பட்டது. 

 

ஏன்னென்றால் பணத்தை நான் இன்று இழந்து விட்டால் எப்போ வேண்டும் என்றாலும் சம்பாதிக்க முடியும் ஆனால் சோறு போட்ட இந்த தொழில்துறைக்கு நான் நல்லது செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் நான் என்  குழுவோடு இணைந்து தேர்தலில் போட்டியிட கட்டாயம் ஏற்பட்டது. சொன்ன விஷியத்தை செய்துகொண்டு இருக்கிறோம். நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன இருந்தாலும் செயல்பாடுகளில் தான் நாங்கள்  காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம். அதை நிறைவேற்ற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அணைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும். 

 

மித்திரன் இந்த கதையை எனக்கு கூறும்போது இது எனக்கு சரியான கதையாக இருக்கும் என்று தோன்றியது துப்பறிவாளன் படத்துக்கு பின்பு இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன். பின்பு மிக முக்கியமாக 

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் மற்றும் சாம் இவர்கள் இணைந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன, அதை போன்று இந்த படமும் வெற்றி பெறும். எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் உமேஷ் மற்றும் என்னுடைய நெருங்கிய நண்பர் யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மொத்த டீமும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம்.  இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6 மலேசியாவில் நடைபெற உள்ளது. ஒரு நடிகனாவும் தயாரிப்பாளராகவும் அனுபவிக்க அனுபவமகா இருந்தது. இரும்புத்திரை என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். 

 

முதல் முறையாக சமந்தாவுடன் வேலை செய்கிறேன் ஒரு அழகான நபர். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சினைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும். படத்தில் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளன. என்னுடைய குருநாதர் நான் முதலில் படத்திற்கு ஒப்புக்கொண்டு அப்பாவிற்கு தொலைபேசியில் இந்த பையன நான் ஹீரோவா ஆக்கினா இவன் என்னைய வில்லனா  மாத்திடான் அப்படின்னு சொல்லிட்டார். ஏனா அவர் தான் எனக்கு உக்கம் கொடுத்து  ஹீரோவாக உருவாக்கினார் செல்லமே படத்தில். ரொம்ப நன்றி அர்ஜுன் சார். ரெண்டு பேருக்கும் கடைசில சண்டை காட்சி ஒன்று உள்ளது, அதை ரெண்டு பேரும் ரொம்ப ரசித்து எடுத்துள்ளோம். படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிக சிறப்பாக அமைத்துள்ளது.” என்று தெரிவித்தார்.

 

சமந்தா பேசும் போது, “இரும்பு திரை படத்தில் கதையும், காட்சியும் உண்மையாக இருக்கும். அறிமுக இயக்குநர் மித்ரனின் இயக்கத்தில் இப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. நான் அவருடைய இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் விஜய் சார், சூர்யா சார் போன்ற மூத்த நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது அவர்களுக்கு மரியாதை அளித்து நடிக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்படத்தில் விஷாலுடன் நடித்தது என்னை விட வயதில் இளையவர் ஒருவரோடு நடித்தது போல் இருந்தது. விஷால் இஸ் தி பெஸ்ட்.” என்றார்.

Related News

1662

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

’மெல்லிசை’ படம் பற்றி மனம் திறந்த நடிகர் கிஷோர்!
Tuesday January-06 2026

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...

’பராசக்தி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday January-06 2026

டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில்,  சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery