தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், தொலைக்காட்சி நடிகை திவ்யாவை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.கே.சுரேஷ், திவ்யாவை அறிமுகப்படுத்தி வைத்தார். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இதற்கிடையே, ஆர்.கே.சுரேஷ் - திவ்யா திருமணம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், திருமணம் நின்றுவிட்டதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பத்திரிகைகளும் திருமணம் நின்று விட்டதாக செய்திகளை வெளியிட்டுவிட்டனர். ஆனால், இதற்கு ஆர்.கே.சுரேஷ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ் - திவ்யா திருமணம் நின்று போனதற்கு காரணம் இருவரது ஜாகத்திலும் சில பிரச்சினைகள் இருக்கிறதாம். அதற்காக தான் திருமணத்தை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரித்ததில், ஜாகத்தில் பிரச்சினை இருப்பது உண்மை தான், அதற்காக திருமணத்தை நிறுத்தவில்லை என்றும், தள்ளிவைத்திருக்கிறோம், அடுத்த ஆண்டு திருமணம் குறித்து அறிவிப்போம், என்று ஆர்.கே.சுரேஷ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...