தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி சினிமா மற்றும் இந்தி சினிமா என்று பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் உள்ளது, என்று பல நடிகைகள் கூறி வரும் நிலையில், பிரபல இந்தி நடிகை ஒருவர், பட வாய்ப்புக்காக நடிகர்கள் கூட தான் படுக்கைக்கு செல்கிறார்கள், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
‘தமிழன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, அதன் பிறகு பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது ஹாலிவுட் படங்களிலும், அமெரிக்க டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.
இந்த நிலையில், பிரியங்கா சோப்ரா அளித்த சமீபத்திய பேட்டியில், “நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள்.
அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன். என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்பபுக்காக நான் அனுசரித்துப் போகவில்லை. சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்.
நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம்.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...