திருமணத்திற்குப் பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வந்த சினேகா, குழந்தைக்காக சில ஆண்டுகள் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது மீண்டும் விளம்பரப் படங்கள், திரைப்படங்கள் என்று பிஸியாகியிருப்பவர், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
சினேகாவின் வேடம் முக்கியமானதாக இருந்தாலும், அந்த வேடம் படத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வருவதால், அந்த வேடம் சரியாக ரசிகர்களிடம் போய் சேரவில்லை.
இந்த நிலையில், தனது காட்சிகளை இயக்குநர் மோகன் ராஜா நீக்கிவிட்டதால் தான், தனது வேடம் ரசிகர்கள் மனதில் நிற்கவில்லை, என்று சினேகா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தன்னை வைத்து 18 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதால் 15 நிமிடங்களாவது படத்தில் தனது கதாபாத்திரம் வரும் என்று நினைத்த எனக்கு, பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. காரணம் படத்தில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நான் வருகிறேன். இந்த வேடத்திற்காக எனது உடல் எடையை குறைத்தேன். குழந்தை பிறப்புக்கு பிறகு பெண்கள் உடல் எடையை குறைப்பது ரொம்ப கடினமான ஒன்று என்றாலும், இந்த படத்திற்காக என்னை வருத்திக் கொண்டு நான் அதை செய்தேன். ஆனால், எனது உழைப்பு அனைத்தும் வீனடிக்கப்பட்டு விட்டது. வெறும் 5 நிமிடத்திற்காக என்னை ரொம்பவே கஷ்ட்டப்படுத்திவிட்டார்கள்.” என்றும் கூறியுள்ளார்.
மொத்தத்தில், வேலைக்காரன் படத்தின் இயக்குநர் மோகன் ராஜா, தன்னை ஏமாற்றிவிட்டார், என்றும் சினேகா குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...