சி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் ‘செயல்’. ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.
வி.இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். லலிதானந்த், ஜீவன் மயில் ஆகியோர் பாடல்கள் எழுத, ஆர்.நிர்மல் எடிட்டிங் செய்கிறார். கனல் கண்ணன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க, பாபா பாஸ்கர் நடனம் அமைக்கிறார். ஜான் பிரிட்டோ கலைத் துறையை கவனிக்க, ஏ.பி.ரவி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரவி அப்புலு இயக்குகிறார். இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள “நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா...” என்ற ரொமாண்டிக் பாடல் காட்சி சாலக்குடி, வாகமன் போன்ற அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமப்பட்டு படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். அதேபோல், “டே மாமா விட்டுத் தள்ளு...” என்ற பாடல் காட்சியை முழுக்க முழுக்க சென்னையிலேயே படமாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...