தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள திரிஷா, பொது மக்களுக்கான கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தொழில்நுட்பமும், நாகரீகமும் வளர்ச்சியடைந்துள்ள தற்போதைய காலக்கட்டத்திலும் கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிவறைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனை முற்றிலுமாக குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்காக, மக்களிடம் பிரபலமாக உள்ளவர்களை கோண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, கழிப்பறை கட்டுவதற்காக அரசு செய்து கொடுக்கும் உதவிகள் குறித்தும் எடுத்துறைத்து வருகின்றன.
அந்தவகையில் குறைந்த செலவில் கழிவறை கட்டுவதற்கான முயற்சிகளை யுனிசெப் அமைப்பு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக யுனிசெப் அமைப்பு, சென்னையை அடுத்துள்ள திருப்போரூரில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கழிவறை கட்டும் பணியை தொடங்கியுள்ளது.
யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதரான நடிகை திரிஷா, இதில் பங்கேற்று செங்கற்களை அடுக்கி கழிவறை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...