Latest News :

’2.0’ எப்போது ரிலீஸ் - அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்ட ரஜினி!
Saturday December-30 2017

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்து நடித்துள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்க, எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்துள்ளார்.

 

படம் முடிவடைந்து, டப்பிங் பணிகளும் முடிவடைந்த நிலையில், ‘2.0’ தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஜனவரி 26 ஆம் தேதி ரிலிஸாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அன்றைய தினமும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவதற்கு காலதாமதமாகிறது என்று கூறப்பட்டது. 

 

இந்நிலையில், சென்னையில் இன்று ரசிகர்களுடனான சந்திப்பின்போது பேசிய ரஜினிகாந்த், படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தினார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘2.O’ திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

 

மேலும், தனது அடுத்த படமான ’காலா’ படத்தில் வித்தியாசமான ரஜினிகாந்தை இயக்குநர் ரஞ்சித் காண்பித்திருப்பதாகவும், காலாவிற்குப் பிறகு என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

Related News

1669

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery