நடிகர் விக்ரமின் தந்தையும் நடிகருமான வினோத் ராஜ் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.
முன்னாள் இந்திய ராணுவ வீரரான வினோத் ராஜ், விஜயின் ‘கில்லி’ படத்தில் திரிஷாவுக்கு அப்பா வேடத்தில் நடித்தார். மேலும், விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ படத்தில் வின்னின் உதவியாளர் வேடத்தில் நடித்தார். இப்படி பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இன்று (டிச.31) மாலை 4 மணியளவில் வினோத் ராஜ் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இவரது இறுதிச் சடங்கு நாளை மாலை நடக்க இருக்கிறது. இறுதி அஞ்சலிக்காக இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...