தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகை ரெஜினா, தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானாலும், அவரை வளர்த்தது என்னவோ தெலுங்கு ரசிகர்கள் தான். பிறகு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்து மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கினார்.
’மாநகரம்’, ’சரவணன் இருக்க பயமேன்’, ’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ என்று ரெஜினாவுக்கு தமிழில் தொடர்ந்து படங்கள் வெளியானாலும், அவரால் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. மேலும், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை ரெஜினா பெரிதும் நம்பியிருந்தாலும், அப்படத்தின் ரிலீஸாவதில் சிக்கலை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், என்னதான் தெலுங்கில் அதிக சம்பளத்துடன் அதிகமான பட வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவுள் உள்ள ரெஜினா, அதற்காக தெலுங்கில் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை தமிழ்ப் படங்களுக்கு வாங்கும் ஆஃபர் ஒன்றை அறிவித்திருக்கிறாராம்.
தற்போது, இந்த ஆஃபரை முன் வைத்து தான் கோடம்பாக்கத்தில் பட வாய்ப்புகளை தேடி வருகிறாராம்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...