Latest News :

ஐஸ்வர்யா ராய்க்கு 27 வயதில் மகன் உள்ளாரா? - பாலிவுட்டில் பரபரப்பு
Sunday December-31 2017

ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிக்கொண்டு சில நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது போலவும், நடிகர் தனுஷின் உண்மையான பெற்றோர்கள் தாங்கள் தான் என்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருப்பது போல, 27 வயது இளைஞர் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று கூறியுள்ளார்.

 

உலக அழகி பட்டத்தை வென்று உலகத்தின் பார்வையை தன் மீது பட வைத்த ஐஸ்வர்யா ராய், தற்போது பாலிவுட்டின் மகாரணியாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் 44 வயதான ஐஸ்வர்யா ராயை தாய் என்று கூறும் அந்த 27 வயது இளைஞர் பாலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளார்.

 

இது குறித்து அந்த இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது தந்தை விசாகப்படிணத்தை சேர்ந்த மவுலு ஆதிரெட்டி, ஐஸ்வர்யா ராய் உதவியுடன் டெஸ்ட் டியூப் மூலம் என்னை பெற்றெடுத்தார். அதன் பின் இரண்டு வருடங்கள் லண்டனில் ஐஸ்வர்யா ராயுடன் வசித்தேன். தற்போது தாய் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.


Related News

1681

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery