ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்ற கேள்விக்கான பதில் கடந்த ஆண்டின் இறுதி நாளில் தெரிந்த நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவெசம் எப்படி இருக்கும், என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தை மாதம் தனது புதிய கட்சியின் பெயரை ரஜினிகாந்த அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் தனது கட்சியின் மூலம் தனித்து நிற்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று 2018 புதிய ஆண்டு பிறந்ததையொட்டி ரஜினிகாந்த்தை சந்திக்க காலையிலேயே ரஜினி ரசிகர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். இதையடுத்து வெளியே வந்த ரஜினிகாந்த், தனது ரசிகர்களை பார்த்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், இனி ரசிகர்களை அடிக்கடி சந்திக்க முடிவு செய்துள்ள ரஜினிகாந்த், தொகுதி வாரியாக மக்களை சந்தித்து, குறைகளை கேற்கவும் முடிவு செய்துள்ளாராம்.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...