Latest News :

தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் - இயக்குநர் ஆவேசம்!
Monday January-01 2018

விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், அக்கட்சியின் மூலம் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், ரஜினிகாந்த் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன், என்று திரைப்பட இயக்குநர் வ.கெளதமன் கூறியுள்ளார்.

 

இது குறித்து கூறிய வ.கெளதமன், “நினைத்து பாரக்க முடியாத துயரமான மனோநிலையில்தான் இந்த ஆண்டு தொடங்குகிறது. 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இநத தமிழினம் இன்று சொல்ல முடியாத அளவுக்கு உரிமையை இழந்துள்ளது.

 

நீர், நிலம், ஆறு, வளம் ஆகிய மட்டுமல்லாமல் உயிரையும் உரிமையும் இழந்து வரும் நிலையில் மீனவர்கள், விவசாயிகள், மாணவர்களின் உரிமையை காப்பாற்ற எங்கேயாவது இருந்து ஒரு உண்மையான, தெளிவான பெரும் வெளிச்சம் தமிழ் இனத்தின் விடியலுக்கு ஏதாவது கிடைத்துவிடாதா என்று தேடி வருகிறோம்.

 

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு துக்க செய்தியை தமிழ் இனத்துக்கு புத்தாண்டு பரிசாக கொடுத்திருக்கிறார். தமிழர்களின் உயிர், உரிமைகள் பறிக்கப்படும் போது என்றாவது களத்தில் நின்று போராடியிருக்கிறாரா. இந்த நிலையில் ஆன்மீக அரசியலை அவர் பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியுளளார்.

 

ரஜினிகாந்த் பாஜகவின் பின்புலத்தில் தான் இயங்குகிறார். ரஜினி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து நான் நிற்பேன்.” என்றார்.

Related News

1687

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery