விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சினேகா, திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிப்பதை தவிர்த்து வந்தவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் - நயந்தாரா நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தில் சினேகா நடித்திருந்தார். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் சினேகாவின் வேடம் ரொம்ப குறைவான இரங்களில் மட்டும் வந்ததால் அவர் ரொம்ப அப்செட்டாகிவிட்டாராம்.
படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான அந்த வேடத்திற்காக மொத்தம் 18 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட சினேகா, அந்த வேடத்திற்காக உடல் எடையை குறைத்தது உள்ளிட்ட பல்வேறு கஷ்ட்டங்களை தாங்கிக் கொண்டாராம். எப்படியும் படத்தில் 15 நிமிடமாவது வருவோம், என்று அவர் எதிர்ப்பார்த்த நிலையில், வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே அவரது வேடம் வருகிறது. இதனால் கடுப்பான சினேகா, ‘வேலைக்காரன்’ பட இயக்குநர் மோகன் ராஜ தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறுவதுடன், தனது அதிருப்தியை பல பேட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சினேகாவின் குற்றச் சாட்டுக்கு பதில் அளித்துள்ள மோகன் ராஜா, படத்தில் சினேகாவின் கேரக்டர் தான் அதிகளவில் பேசப்படுகிறது. இருந்தாலும் சினேகா நாங்கள் தவறு செய்ததாக நினைத்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...