Latest News :

பல லட்சம் சம்பளம் - சவுண்ட் பார்ட்டிக்கு ஜோடியான ஜுலி!
Tuesday January-02 2018

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடம் பிரபலமான ஜுலி, அதை வைத்து பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர். அந்த நிகழ்ச்சியால் தற்போது பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார்.

 

டிவியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது, வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பு, கடை திறப்பு, சினிமாவில் நடிப்பது என்று பல வழிகளில் பல லட்சங்களை சம்பாதித்து வரும்  ஜுலி, ஒரு படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் அந்த படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்க சாதாரண சம்பளம் வாங்கவில்லையாம், பல ஹீரோயின்கள் அவரைப் பார்த்து பொறாமைப்படும் விதத்தில் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

 

அப்படத்தில் ஹீரோவாக நடிப்பவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இவர் சாதாரணமானவர் அல்ல, பெரிய சவுண்ட் பார்ட்டி. சொந்தமாக படம் தயாரித்து ஹீரோவாக நடிப்பதோடு, முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் எதாவது ஒரு வேடத்தில் நடித்தால் போதும் என்ற முடிவில் இருப்பவர், பொது மக்களும், சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.

 

கே7 புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இயக்குநர் மற்றும் தலைப்பு உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Related News

1690

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery