பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் இயக்குனர் பாலாஜி மோகன் மாரி 2 படத்தின் அறிவிப்பு பற்றி அதிகார பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களையும் பாலாஜி மோகன் வெளியிட்டிருந்தார்.
இப்படத்தின் பூஜை டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ், கிருஷ்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஜி.கே. பிரசன்ன்ன ஆகியோர் கலந்து கொண்டனர். மாரி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 வருடங்களுக்கு பிறகு அமைவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மாரி2 படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்க உள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...