கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், தமிழ் சினிமாவில் நடிகராக பிரபலமான பிறகு தெலுங்கு, இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.
இதற்கிடையே, பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்த பிரகாஷ்ராஜ், விஷால் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவிக்கையில், நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது, என்று கூறியிருந்தார். இத்தனைக்கும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழுவில் பிரகாஷ்ராஜ் பங்கேற்று இருக்கிறர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விஷால் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ்ராஜ், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததை ஆதரித்து கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், இதற்குமுன் கர்நாடகாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது 'கர்நாடகாவை கன்னடன் தான் ஆளவேண்டும்' என ஆக்ரோஷமாக பேசினார்.
ஆனால் தற்போது கன்னடரான ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பேன் என கூறுவதை பிரகாஷ் ராஜ் வரவேற்கிறார். தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்ற் கருத்தை எதிர்கிறார்.
இப்படி இரட்டை நிலைபாடு ஏன் என பிரகாஷ்ராஜுக்கு எதிராக தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...