மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், வேலைக்காரன் படத்திற்கு எதிராக நடைபெற்ற பஞ்சாயத்து குறித்து கூறியுள்ளார்.
”சினிமா துறையில் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடக்கிறது. ரெட் கார்டு என்ற கான்செப்ட் எனக்கு புரியவில்லை. ஒருவரை வேலை செய்யவிடாமல் ஷூட்டிங்கை நிறுத்தினால் எப்படி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
வேலைக்காரன் ஷூட்டிங் முதல் நாள் அன்று ஷூட்டிங் நடக்கவிடவில்லை. நான் கொடுத்த சில கமிட்மெண்டுகள் தொடர்பாக இரவு முழுவதும் பஞ்சாயத்து நடந்தது. அப்போது நான் கமிட்மென்ட் கொடுக்காத இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் படம் செய்யவேண்டும் என கூறினார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை”, என்று தெரிவித்தார்.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...