ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத அரசியலியல் களம் இறங்கியுள்ள ரஜினிகாந்த், ஆன்மீக அரசியல் நடத்துவோம், என்று கூறி ஆரம்பத்திலே தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார். மேலும் ஊழல் இல்லாத அரசியலை நடத்துவோம், என்று கூறி வரும் ரஜினிகாந்த், அரசியல் கட்சியை நடத்த அவர் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடமே பணத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளாராம்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ள ரஜினிகாந்த், ஒவ்வொரு தொகுதியிலும் வெயிட்டான பார்ட்டிகளின் பட்டியலை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளாராம். இவர்களில் யாராவது ரஜினி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவர்கள் ரூ.1 கோடி வரை தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டுமாம்.
அப்படி செலவு செய்ய முடியும், அதற்கான தகுதி உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு சீட்டாம். மேலும், அந்த பணத்தை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சம்பாதிக்கும் எண்ணமும் அவர்களுக்கு இருக்க கூடாது, இதன் மூலம் மக்களுக்கு அவர்கள் நல்லது மட்டும் செய்வார்களாம்.
மொத்தத்தில், ரஜினிகாந்தின் இந்த கணக்கை பார்த்தால், மக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து அதன் மூலம் கட்சியை நடத்த முடிவு செய்துள்ளார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...