விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘மெர்சல்’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்லி இயக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்க, வில்லனாக இயக்குநர் எஸ்.ஜெ.சூர்யா நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தின் பாடல்களுக்காகவும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி “ஆளப்போறான் தமிழன்...” என்ற ஒரு பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம், இப்பாடல் வெளியீடு குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...