விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதன் மூலம் 234 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தனது கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.
இதையடுத்து ரஜினி மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார். அங்கு சுவாமி கவுதமானந்தாவை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். அப்போது கருணாநிதியிடம், ரஜினி உடல்நலம் விசாரிக்கிறார். ஆங்கில புத்தாண்டு வாழ்த்தும் தெரிவிக்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...