தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் கட்டிடத்தை கட்டுவதற்காக சங்க நிர்வாகம் பல்வேறு வழிகளில் நிதி திரட்டி வருகின்றனர். அதன்படி, வரும் 6,7 ஆகிய தேதிகளில் மலேசியாவில் நட்சத்திர கலை நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் போட்டி நடத்துகின்றனர். இதற்காக தற்போதே நடிகர்கள் குழு குழுவாக கிளம்பி வருகிறார்கள்.
நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைமையிலான நடிகர் சங்கம் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு மலேசிய அரசு பெரும் ஒத்துழைப்பு கொடுத்திருப்பதோடு, மலேசிய நடிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு, தமிழ் நடிகர்களுடன் சேர்ந்து கால்பந்தாட்டமும் விளையாட உள்ளார்கள்.
இந்த நிலையில், வரும் 6 ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள கார்ட்டன் ரைசர் நிகழ்ச்சியில், அனைவரும் கருப்பு உடையை அணிந்து வர வேண்டும் என்று நடிகர் நடிகைகளுக்கு அறிவுறுத்திய விழா குழுவினர், நடிகைகள் கவர்ச்சிகரமான உடைகளில் வர வேண்டும் என்றும் கூறியுள்ளதாம்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...