அதிகமான படங்கள் கையில் இருக்கும் நடிகராக திகழும் ஜி.வி.பிரகாஷ் குமார், சுமார் 10 படங்களில் நடித்து வருகிறார். இப்படி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பிஸியாக இயங்கிக் கொண்டிருப்பவர், தனது மனைவியின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடி அசத்தியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில், பல ஹிட் பாடல்களை பாடியவர் சைந்தவி. ஜி.வி.பிரகாஷின் மனைவியான இவர் தற்போது பல படங்களில் பாடி வருகிறார். முன்னணி பின்னணி பாடகிகளில் ஒருவரான சைந்தவிக்கு இன்று (ஜனவரி 03) பிறந்தந்தநாள்.
படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், தனது மனைவியின் பிரந்தநாளை கொண்டாட முடிவு செய்த ஜி.வி.பிரகாஷ், அவரை தான் நடித்துக் கொண்டிருக்கும் ‘ஐங்கரன்’ படப்பிடிப்பு தளத்திற்கு வர வைத்து கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் படத்தின் இயக்குநர் ரவி அரசு உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துக் கொண்டார்கள்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...