ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய அரசியல் கட்சியில் நடிகர்கள் பலர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ், ரஜினியை பின் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும், இது குறித்த தகவலை நாளை அவர் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லைகா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியான ராஜு மகாலிங்கம், ரஜினியின் கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனம்தான் ரூ. 450 கோடி செலவில் எந்திரன் 2 படத்தை அதாவது 2.0 படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். இவரது தீவிர ரசிகராக இருப்பவர் ராஜூ மகாலிங்கம். இவர் ரஜினியின் கட்சியில் இணைவதற்காக லைகா நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...