ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புது படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. அதனால், ‘விஜய் 62’என்று அழைக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்ற படத்தின் போட்டோ ஷூட்டின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது. இதனை அறிந்த படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் அருகில் விஜய் கோட் ஷூட்டோடு நிற்பது போலவும், சிகரெட் புகைப்பதும் போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதால், விஜய் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.
ஆனால், விஜய் ரசிகர்களோ வெளியான புகைப்படங்களை வைத்து விஜய் 62 படத்திற்கு போஸ்டர் டிசைன் செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...