பெண் ஆர்.ஜே ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐதாராபாத்தை சேர்ந்த பிரபல பாடகர் கஷல் ஸ்ரீனிவாஸ் என்பவரை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.
இந்த செய்தி ஆந்திர ஊடகங்கள் மட்டும் இன்றி தமிழக ஊடகத்திலும் பரவலாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட முன்னணி செய்தி இணையதளம் ஒன்று, கஷல் ஸ்ரீநிவாஸ் புகைப்படத்திற்கு பதிலாக தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ள ஸ்ரீநிவாஸின் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டது.
இதனால், ஸ்ரீநிவாஸ் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டதோடு, அவருக்கு போன் போட்டு விசாரிக்கவும் தொடங்கிவிட்டார்கள். இதனால் கோபம் கொண்ட ஸ்ரீநிவாஸ், அந்த இணையதள பத்திரிகை மீது வழக்கு தொடர்வேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது, ஸ்ரீநிவாஸ் புகைப்படத்தையும் அந்த செய்தியையும் அந்த இணையதளம் நீக்கியிருப்பதோடு, அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...