தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளர் என சினிமாத் துறையில் இரண்டு பொருப்புகளை வகிக்கும் விஷால், விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிட முயன்றார்.
ஆனால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், அவரால் போட்டியிட முடியவில்லை. இருந்தாலும் ஆர்.கே.நகர் மக்களுக்காக நான் பணிபுரிவேன் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஷால், அவருக்காக தெரு தெருவாக பிரச்சாரம் செய்ய நான் தயாராக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினி அறிவித்துள்ளார். தலைவன் அரசியலில் இறங்கிவிட்டார். அரசியல் என்பதும் ஒரு சமூக சேவை தான். நான் அவருக்கு ஒரு நல்ல தொண்டனாக ரோட்ல இறங்கி அவர் போட்டியிடும் அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் செய்வேன். எப்போதும், அவருக்கு உதவியாக இருப்பேன்.” என்று தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரஜினி மற்றும் கமல் என இருவரும் அரசியலுக்கு வந்தால் ஆதரவு யாருக்கு? என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு ”அரசியல் என்று வந்தால் கமல்ஹாசனுக்கு தான் என் ஆதரவு” என்று விஷால் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...