ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பலூன்’. இதில் ஹீரோயின்களாக அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியுள்ளார்.
ரசிகர்களிடம் இப்படம் வரவேற்பு பெற்றாலும், காலதாமதமாக ரிலீஸ் ஆனதால் தயாரிப்பாளருக்கு நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நஷ்ட்டத்திற்கும், படம் காலதாமதம் ஆனதற்கும் காரணம் நடிகர் ஜெய் தான் என்றும், அதற்காக அவர் தயாரிப்பாளருக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் இயக்குநர் சினிஷ் மறைமுகமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், பலூன் படப்பிடிப்பின் போது, சரியாக படப்பிடிப்புக்கு வராமலும், அப்படி வந்தாலும் மது போதையில் வந்து படப்பிடிப்பு நடைபெறாத வகையிலும் ஜெய் நடந்துக்கொண்டதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜெய், இப்படி தொடர்ந்து கொடுத்த டார்ச்சர் காரணமாக இயக்குநர் சினிஷ் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை காப்பாற்றி சமாதானப்படுத்திய தயாரிப்பாளர்கள் அவரது எதிர்காலத்திற்குகாக இந்த படத்தை முடித்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இப்படி ஜெய் கொடுத்த டார்ச்சாராலும், இடையூறாலும் தான் படத்திறிகு நஷ்ட்டம் ஏற்பட்டுவிட்டது என்று கூறிய தயாரிப்பாளர்கள், இது தொடர்பாக ஜெய் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...