Latest News :

பிக் பாஸ் பிரபலத்திடம் தவறாக நடந்துக் கொண்ட ரசிகர்!
Friday January-05 2018

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சி என்றால் அது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். டிவி பார்க்காதவர்களையும் டிவி முன் உட்கார வைத்த இந்த நிகழ்ச்சியின் மூலம், அதில் பங்கேற்றவர்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது.

 

விரைவில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட உள்ள நிலையில், பிக் பாஸ் பிரபலத்திடம் ரசிகர் ஒருவர் தவறாக நடந்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது, இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியில் 3 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான வாக்குகளை ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட மாலுக்கு வந்து போட வேண்டும்.

 

அந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது, அப்போது பிக்பாஸ் பிரபலங்களும் வந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் நடிகை ஹினா கானின் முடியை இழுத்து செல்பி எடுக்க முயன்றிருக்கிறார். திடீரென்று முடி இழுக்கப்பட்டதால் நடிகை ஹினா கான் அதிர்ச்சியடைந்ததோடு, அலறி துடித்தார். 

 

இந்த சம்பவத்தால் அந்த மாலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அங்கிருந்து நடிகை ஹினா கானை பாதுகாவலர்கள் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

Related News

1718

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery