அரசியல், சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகள் பற்றியும் சமூக வலைதளத்தில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்தி வருபவர்களில் நடிகை கஸ்தூரி முக்கியமானவராக திகழ்கிறார்.
ரஜினி, கமல் ஆகியோரது அரசியல் எண்ட்ரி, அதிமுக ஆட்சி, ஆர்.கே.நகர் தேர்தல் என அனைத்தைப் பற்றியும் ட்விட்டரில் கமெண்ட் போட்ட கஸ்தூரி, சரவணா ஸ்டோர் முதலாளியை கலாய்த்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் இன்று நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ரஜினி, கமல் உள்ளிட்ட சுமார் 340 நடிகர், நடிகைகள் மலேசியாவில் முகாமிட்டுள்ளனர். இந்த கலை நிகழ்ச்சிக்கு முன்னதாக நேற்று கர்ட்டன் ரைசர் நிகழ்வு நடைபெற்றது. இதில் ரஜினிகாந்துக்கு பக்கத்தில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அமர்ந்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த புகைப்படம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, “"Make up, லிப்ஸ்டிக், விக், கோட் சூட்... அம்மாடியோவ் ! பக்கத்துல, எளிமையா casual ஆ #SuperStarRajinikanth" என்று தெரிவித்துள்ளார்.
சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் ஹன்சிகா, தமன்னாவுடன் சரவணா ஸ்டோர் உரிமையாளர் நடனம் ஆடுவதை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிட்டு வந்தாலும், பிரபலமானவர்களில் ஒருவரான நடிகை கஸ்தூரி, இப்படி வெளிப்படையாக கலாய்த்திருப்பது, சரவணா ஸ்டோர்ஸ் வட்டாரத்தில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளதாம்.
Make up, லிப்ஸ்டிக், விக், கோட் சூட்... அம்மாடியோவ் ! பக்கத்துல, எளிமையா casual ஆ #SuperStarRajinikanth . #Thalaivar @superstarrajini pic.twitter.com/EAT8Mm4Xsi
— kasturi shankar (@KasthuriShankar) January 5, 2018
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...